Friday, May 15, 2020

பிரதம மந்திரியின் விவசாயிகள் பென்ஷ ன் திட்டம்

            பிரதம மந்திரியின் விவசாயிகள் பென்ஷன் திட்டத்தின் கீழ் 60 வயதிற்கு பிறகு மாதம் 3 ஆயிரம் பெரும் உன்னத திட்டம் ஆகும்.விவசாயிகளின் ஓய்வூதிய திட்டதின் சிறப்பு அம்சம் என்னவென்றால் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள சிறு, குறு விவசாயிகள் மட்டுமே இந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர முடியும்.

விவசாயிகள் தங்கள் வயதிற்கு ஏற்ப மாதந்தோறும் தொடக்கத்தில் செலுத்தும் தொகை ரூ 55 முதல் ரூ 200 வரை என்ன தொகையோ அதே தொகையை 60 வயது வரை செலுத்த வேண்டும்.

1 மாதம் 2 மாதம் 6 மாதம் மற்றும் 1 வருடம் என விவசாயிகள் வசதிக்கேற்ப தங்கள் வங்கி கணக்கு மூலம் ஆட்டோ டெபிட் முறையில் செலுத்தும் வசதி உள்ளது.

60 வயது முதல் மாதந்தோறும் வாழ்நாள் முழுவதும் 3 ஆயிரம் ஓய்வூதியமாக கிடைக்கும். எதிர்பாராத விதமாக பணம் கட்டியவர் இறக்க நேரிட்டால் வாரிசுதாரர்களுக்கு  மாதம் ரூ 1500 தொடர்ந்து வழங்கப்படும்.

விவசாயிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகு  இந்த திட்டத்தை தொடர விருப்பம் இல்லை என்றால் கட்டிய பணம் வட்டியுடன்  திரும்ப பெரும் வசதி உள்ளது.

இத்திட்டத்தில் சேர தேவையான ஆவணங்கள்:
1. ஆதார் அட்டை ,பிறந்த தேதி, மாதம் வருடத்திற்கான சான்றிதழ் இருக்க வேண்டும்.
2.வரிசுதாரர் ஆதார் அட்டை
3. வங்கி கணக்கு

போதுசேவை மையங்களில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அருகில் உள்ள போதுசேவை மையத்தை தொடர்பு கொள்ளவும்...

அருகிலுள்ள போதுசேவை மையம் பற்றி தெரிந்துகொள்ள
Locator.csccloud.in

இலவச இணைப்பு எண்
18002676888